search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாலிபர் சாவு"

    • ஹரி பிரசாத் (22). இவர் இன்று காலை 9 மணி அளவில் செவ்வாய்பேட்டை பஜார் வீதி தேர்நிலையம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
    • ஹரிபிரசாத் பிரேக் போட்டபோது, எதிர் திசையில் வந்து கொண்டிருந்த டிராக்டர் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    சேலம்:

    சேலம் செவ்வாய்பேட்டை மாதேஸ்வரன் தெரு பகுதியை சேர்ந்தவர் தங்கதுரை.இவரது மகன் ஹரி பிரசாத் (22). இவர் இன்று காலை 9 மணி அளவில் செவ்வாய்பேட்டை பஜார் வீதி தேர்நிலையம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    டிராக்டர் மோதியது

    எதிர் திசையில் ஒரு டிராக்டர் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென ஒரு நபர் சாலையின் குறுக்கே வந்துள்ளார்.

    அவர் மீது மோதாமல் இருக்க ஹரிபிரசாத் பிரேக் போட்டபோது, எதிர் திசையில் வந்து கொண்டிருந்த டிராக்டர் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் தடுமாறி விழுந்த ஹரிபிரசாத் தலையில் பலத்த காயம் அடைந்தார். இதைக் கண்ட அந்த பகுதி மக்கள் உடனடியாக ஹரி பிரசாத்தை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் செல்லும் வழியிலேயே ஹரி பிரசாத் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து செவ்வாய்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என தெரியவில்லை
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை- கேத்தாண்டப்பட்டி ரெயில் நிலையங்களுக்கு இடையே சுமார் 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக, ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என தெரியவில்லை. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கும்பல்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ் (33). இவர் திருப்பூரில் கேபிள் லைன் பதிக்கும் தொழில் செய்து வந்தார்.
    • கனகராஜ் ஊருக்கு வந்ததில் இருந்து மது குடித்துவிட்டு போதையில் சுற்றியுள்ளார். இந்த நிலையில் திடீரென அவர் மாயமானார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் மல்லியகரை அருகே உள்ள கும்பல்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ் (33). இவர் திருப்பூரில் கேபிள் லைன் பதிக்கும் தொழில் செய்து வந்தார். இந்த நிலையில் ஆடி 18 கொண்டாடுவதற்காக சொந்த ஊருக்கு வந்துள்ளார். கனகராஜ் ஊருக்கு வந்ததில் இருந்து மது குடித்துவிட்டு போதையில் சுற்றியுள்ளார். இந்த நிலையில் திடீரென அவர் மாயமானார். இதையடுத்து அவரது மனைவி அபிராமி மற்றும் உறவினர்கள் கனகராஜை தேடினர். இதனிடையே கனகராஜின் வீட்டின் அருகில் கிணறு ஒன்று உள்ளது. இதில் 60 அடிக்கு தண்ணீர் உள்ளது. கனகராஜ் கிணற்றில் தவறி விழுந்து இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் காமிராவை உள்ளே அனுப்பி பார்த்துள்ளனர். அப்போது கனகராஜ் கிணற்றில் பிணமாக கிடப்பது தெரிய வந்தது. இதுகுறித்து ஆத்தூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து கனகராஜ் உடலை மீட்டனர். இதுகுறித்து மல்லியகரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தினர். இதில் அவர் போதையில் தவறி விழுந்து இறந்துள்ளது தெரியவந்தது. போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். 

    • ஈச்சங்காடு-கவுண்டனூர் கூட்ரோடு சாலையில் சென்று கொண்டிருந்தார்.
    • நிலைதடுமாறி சாலையில் விழுந்து படுகாயம் அடைந்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே கவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர் மாது (வயது33). இவர் இருசக்கர வாகனத்தில் ஈச்சங்காடு-கவுண்டனூர் கூட்ரோடு சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது நிலைதடுமாறி சாலையில் விழுந்து படுகாயம் அடைந்தார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மத்தூர் அரசு மருத்துவமனயைில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாது உயிரிழந்தார்.

    இது குறித்து மத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தருமபுரியில் உள்ள தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
    • வெங்கடேசனின் தலை பகுதியில் அடிபட்டு மூளை சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி மணியம்பாடி பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரது மகன் வெங்கடேசன் (வயது31). இவர் தருமபுரியில் உள்ள தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இதற்காக அவர் வெண்ணாம்பட்டியில் உள்ள ஹவுசிங் போர்டில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தார்.

    இவரது தந்தை அண்ணாதுரை தருமபுரியில் தனியார் டிராவல்ஸ் ஒன்றை நடத்தி வருகிறார்.

    வெங்கடேசன் வேலைக்கு செல்வதற்கு முன்பு தனது தந்தையின் டிராவல்ஸ் அலுவலகத்திற்கு சென்று சுத்தம் செய்து விட்டு அதன்பிறகு அவர் வேலைக்கு செல்வது வழக்கம். இதேபோல் நேற்று காலை தனது வீட்டில் இருந்து வெங்கடேசன் தந்தையின் டிராவல்ஸ் அலுவலகத்திற்கு புறப்பட்டு சென்றபோது வெண்ணாம்பட்டி ரெயில் கேட்டை கடக்க முயன்றார்.

    அப்போது அந்த வழியாக பெங்களூரு-எர்ணாகுளம் ரெயில் வருவதை தெரியாமல் அஜாக்கி ரதையாக அவர் ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றார். ஆனால், ரெயில் வேகமாக வந்து அவர் மீது மோதியது. இதில் வெங்கடேசனின் தலை மற்றும் கழுத்து பகுதிகளில் அடிபட்டு மூளை சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து தருமபுரி ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வெங்கடேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து ரெயில்வே போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமசாமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கள்ளுகடை பஸ் நிறுத்தம் அருகே அவர் வரும்போது லாரி ஒன்று பின்னால் வந்து மோதியது.
    • வேலு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

    தருமபுரி, 

    தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே பந்தாரஅள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் முனுசாமி. இவரது மகன் வேலு (வயது32). கூலித்தொழிலாளியான இவர் நேற்று தோட்டவேலைக்காக தனது மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    அப்போது அவர் காரிமங்கலம்-மொரப்பூர் சாலையில் உள்ள கள்ளுகடை பஸ் நிறுத்தம் அருகே அவர் வரும்போது லாரி ஒன்று பின்னால் வந்து மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட வேலு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகலவறிந்து காரிமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வேலுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காரிமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரை தேடிவருகின்றனர்.

    • டிரைவர் கைது
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளியை அடுத்த பச்சூர் பழையபேட்டை பகுதியை சேர்ந்தவர் சேர்ந்த மகேந்திரன் மகன் கோபி (வயது 25).

    இவர் சிங்கப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். கோபி கடந்த 3 மாதத்திற்கு முன்பு விடுமுறையில் சொந்த ஊருக்கு திரும்பினார்.

    இந்த நிலையில் நேற்று காலை கோபி தனது மோட்டார் சைக்கிளிலில் பச்சூர் பகுதியில் இருந்து டோல்கேட் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    பச்சூர் ரெயில்வே கேட் அருகே சென்றபோது எதிரே வந்த மினி லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் படுகாயம் அடைந்த கோபியை அங்கிருந்த பொது மக்கள் மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் அவர்மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கோபி இறந்து விட்டார்.

    இது குறித்து நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய நாட்டறம்பள்ளி அருகே மல்லகுண்டா பகுதியைச் சேர்ந்த மினி லாரி டிரைவர் சுரேஷ் (40) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • மின் ஒயர் மீது கை உரசி பரிதாபம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    ஆம்பூர்:

    ஆம்பூர் அடுத்த சின்ன வரிகம் ஊராட்சி மேக்னா பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் தேவராஜ் மகன் தினகரன் (வயது 24), லாரி டிரைவர்.

    இவர் இன்று காலை ஆம்பூர் பெரிய வரிகத்தில் உள்ள தனியார் தோல் தொழிற்சாலைக்கு லோடு ஏற்றி சென்றார்.

    தொழிற்சாலையில் லாரியின் பின்புறத்தில் கட்டப்பட்டிருந்த தார்பாயை கழற்றினார்.

    அப்போது தினகரனின் கை, லாரியின் மேல் புறத்தில் சென்ற மின் ஒயர் மீது உரசியது.

    கண்ணிமைக்கும் நேரத்தில் உடலில் மின்சாரம் பாய்ந்து, தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த உமராபாத் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    தினகரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாரசத்திரம் பகுதியில் உள்ள ஒரு ஏரியில் குளிக்க சென்றார்.
    • அந்த வழியாக சென்றவர்கள் ஏரியில் நரசிம்மா பிணமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தேர்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் முனிராஜ். இவரது மகன் நரசிம்மா (வயது28).

    இவர் நேற்று முன்தினம் மாரசத்திரம் பகுதியில் உள்ள ஒரு ஏரியில் குளிக்க சென்றார். அப்போது நரசிம்மா ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

    அப்போது அந்த வழியாக சென்றவர்கள் ஏரியில் நரசிம்மா பிணமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே அவர்கள் தேன்கனிக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நரசிம்மாவின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென்று பூச்சி மருந்து குடித்து மயங்கி கிடந்தார்.
    • சிகிச்சை பெற்று வந்த அஜீத்குமார் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் கடத்தூர் அருகே ஒடசல்பட்டி கூட்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சுப்பராயன். இவரது மனைவி மகேஸ்வரி. கூலித் தொழிலாளி. இவர்களது மகன் அஜீத்குமார் (வயது24). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    இந்த நிலையில் அஜீத்குமாருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு அவதிக்குள்ளானர். இதற்காக அவர் பல்வேறு மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்றும் பலன் அளிக்கவில்லை.

    இதனால் மனமுடைந்த காணப்பட்ட அஜீத்குமார் நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென்று பூச்சி மருந்து குடித்து மயங்கி கிடந்தார்.

    உடனே அவரை தாய் மகேஸ்வரி மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அஜீத்குமார் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மகேஸ்வரி கடத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வெங்கடேசன் சொந்த வேலை காரணமாக எலவனாசூர் கோட்டைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.
    • டிராக்டர் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் வெங்கடேசன் படுகாயம் அடைந்தார்.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே சிறுவல் கிராமத்தைச் சேர்ந்தவர் முனுசாமி மகன் வெங்கடேசன் (வயது 39) இவர் நேற்று சொந்த வேலை காரணமாக தனது மனைவி நிவாஷினி மற்றும் குழந்தை பிரகதீஸ்வரன் ஆகியோருடன் எலவனாசூர் கோட்டைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் வேலை முடிந்து மீண்டும் ஊருக்கு திரும்பி கொண்டு இருந்தார். அப்பொழுது தியாகை பெரியநாயகி அம்மன் கோவில் அருகே சென்றபோது தனக்கு முன்னாள் சென்ற டிராக்டரை முந்தி சென்றார். அப்போது டிராக்டர் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் வெங்கடேசன் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி வெங்கடேசன் இறந்து போனார். இது குறித்து அவரது மனைவி நிவாஷினி கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • ஓடும் பஸ்சில் மயங்கி விழுந்து வாலிபர் இறந்தார்.
    • பஸ்சை திருமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.

    திருமங்கலம்

    தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள மாயன்மான்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் ராஜ் குமார் மகன் முகேஷ் (வயது26). இவரது மனைவி இசைவாணி. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். முகேஷ் சென்னை கோயம்பேடு பகுதியில் பிளக்ஸ் போர்டு வைக்கும் வேலை பார்த்து வருகிறார். கணவன்-மனைவி அங்கே வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் இன்று தென்காசியில் நடைபெறும் உறவினர் இல்ல விழா விற்காக வருவதற்காக நேற்று இரவு சென்னையில் இருந்து தனியார் ஆம்னி பஸ்சில் புறப்பட்டார். பஸ் அதிகாலை 4 மணியளவில் மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்திற்கு வந்தது.அப்போது முகேஷ் வாந்தி எடுத்துள்ளார்.

    பின்னர் திருமங்கலம் பஸ் நிலையத்தை கடந்தபோது முகேஷ் பஸ்சுக்குள் மயங்கி விழுந்தார். உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். ஆம்புலன்ஸ் டிரைவர் வந்து பரிசோதனை செய்தபோது அவர் ஏற்கனவே இறந்தது தெரிய வந்தது.

    இதனை தொடர்ந்து திருமங்கலம் டவுன் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் பஸ்சில் பயணித்த வாலிபர் இறந்ததால் பஸ்சை திருமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு ெசன்று விசாரணை நடத்தினர். இதனால் அந்த பஸ்சில் பயணிந்த 40-க்கும் மேற்பட்ட பயணிகள் 3 மணி நேரம் காத்திருந்து பரிதவித்தனர். பின்னர் பஸ் அனுப்பி வைக்கப் பட்டது.

    ×